காளான் தக்காளி சூப்

Loading...
Description:

kaalaan-thakkali-soup212காளான் தக்காளி சூப் தேவையான பொருட்கள்

காளான்                      – 100 கிராம்
தக்காளி                      – 50 கிராம்
மைதா மாவு             – 2 தேக்கரண்டி
வெங்காயம்              – 50 கிராம்
எண்ணெய்                – தேவைக்கேற்ப
மிளகு                          -10
சீரகம்                           – சிறதளவு
உப்பு                             – தேவைக்கேற்ப
வாசனைப்பட்டை, பிரிஞ்சி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை       – சிறிதளவு

 

காளான் தக்காளி சூப் செய்முறை

 

தக்காளியை வெந்நீரில் போட்டுத் தோலுரித்து நன்றாகக் கடைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வாசனைப்பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து காளான் துண்டுகளை வதக்க வேண்டும். அத்துடன் தக்காளிச் சாற்றையும் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது 10 மிளகும் அத்துடன் சீரகத்தைப் பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் முடிந்து போட வேண்டும். மாவைக் கரைத்து ஊற்றிக் கிளறி தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

Post a Comment