கால் பாதங்களை மென்மையாக்க இதோ எளிய டிப்ஸ்

Loading...
Description:

625-0-560-350-160-300-053-800-668-160-90-7

உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும், உங்களின் காலில் உள்ள பித்த வெடிப்புகள் ஒரு குறையாக இருந்து உங்களின் அழகையே கெடுக்கும் வகையில் அமையும்.

பாதத்தில் வெடிப்புகள் மீண்டும் மீண்டும் வரக் கூடியதாக இருப்பதால், சோர்ந்துபோய் அதை கவனிக்காமல் விட்டு விடுவார்கள்.

இதனை இயற்கையான முறையில் எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்!

மருதாணி இலை

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து பின் அதை கால் வெடிப்பில் பூசி வந்தால், விரைவில் கால் வெடிப்பு குணமாகும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்பிலை

வேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைத்து அதனுடன், விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (8)

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு காணாமல் போய்விடும்.

எலுமிச்சை

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோல்களைக் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கி கிருமிகளை அகற்றி வெடிப்பு வராமல் தடுக்கிறது.

சமையல் சோடா

சமையல் சோடா எலுமிச்சை சாறு சிறிது ஷாம்பு போன்றவற்றை கலந்து அதில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள். 20 நிமிடங்களுக்கு கழித்து பின் நன்றாக பாதத்தை தேயுங்கள். இப்படி வாரம் இருமுறை செய்தால் வெடிப்பு வராமல் இருக்கும்

Post a Comment