காய்கறி மக்காச் சோள சூப்

Loading...
Description:

சுவையான காய்கறி மக்காச் சோள சூப், எளிய காய்கறி மக்காச் சோள சூப், காய்கறி மக்காச் சோள சூப் செய்யும் முறை, பிரபலமான காய்கறி மக்காச் சோள சூப், காய்கறி மக்காச் சோள சூப் செய்முறை, காய்கறி மக்காச் சோள சூப் சமையல் குறிப்புகள், காய்கறி மக்காச் சோள சூப் செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் காய்கறி மக்காச் சோள சூப் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி மக்காச் சோள சூப் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
பெரிய வெங்காயம் – 1
காரட் – 2
மக்காச்சோள முத்துக்கள் – 1/2 கப்
துருவிய கோஸ் – 1/2 கப்
ஜவ்வரிசி மாவு – 1 டீஸ்பூன்
பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பீன்ஸ் – 1/2 கப்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உணவு செய்முறை : காய்கறி மக்காச் சோள சூப்
Step 1.
முதலில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

Step 2.
ஆனால் குழைய விடக்கூடாது. ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

Step 3.
சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து இறக்கவும்.

Post a Comment