கல் ஆப்பம் ,tamil samayal tips

Loading...
Description:

Kalappam (1)

கல் ஆப்பம் கேரளா பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான காலை உணவாக உள்ளது. இது தோசையை போலவே இருக்கும் ஆனால் சிறிது மாறுபட்டது. இதனுடன் நீங்கள் காரசாரமான மீன் அல்லது கோழி குழம்பு கொண்டு பரிமாறவும். எனினும், சட்னி கொண்டும் இதை காலையில் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்
சீரகம்
பச்சரிசி
ஈஸ்ட்
உப்பு
சர்க்கரை
எப்படி செய்வது:
1. சீரகம் மற்றும் தேங்காயை நன்கு அரைத்து கொள்ளவும்.
2. இதில் சர்க்கரை மற்றும் அரிசி தூளை கலந்து கொள்ளவும்.
3. இதனுடன் ஈஸ்ட் சேர்க்கவும்.
4. இதை சில மணி நேரம் நொதிக்க விடவும். பின் சிறிது உப்பு சேர்க்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மற்றும் ஒரு பெரிய கரண்டியால் மாவை ஊற்றவும்.
6. இருபுறமும் நன்றாக  வேகவைத்து எடுக்கவும்.

Post a Comment