கறி மட்டன் குழம்பு

Loading...
Description:

13510973_1041770829203306_8889538357807569333_n

இந்த மட்டன் குழம்பு நமக்கு அனைத்து சந்தைகளிலும் கிடைக்கும். இதன் சுவைக்கு ஏங்கும் ஒரு தனி கூட்டமே உள்ளது.

திருப்பத்தூர் ஏஜிஎஸ் மாலில் இரண்டாவது தளத்தில் பேன்சி ஸ்டோர் வைத்து இருக்கும் சரவணன் – 8754737578 தான் இந்த உணவின் மாஸ்டர். அவர் பரம்பரை பரம்பரையாக இந்த சந்தை கறி தொழிலில் உள்ளனர். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை நாடவும்.

இதன் சுவை அம்புட்டு ருசியாக இருக்கும். இந்த குழம்பை சாதத்திலும், கேழ்வரகு களி உருண்டை மற்றும் ரொட்டி உடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

இந்த குழம்பு காரசாரமாக இருக்கும் அது மட்டுமல்ல இது கிராமத்து சுவை தண்மை உடையதாக இருக்கும்.

எனது நண்பர்கள் இன்று எந்த ஊரில் சந்தை என்று விசாரித்து அந்த ஊரில் சந்தை கறியை உண்பர்.

தேவையான பொருட்கள்
மட்டன் 500 கிராம்
மட்டன் கொழுப்பு 200 கிராம்
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது )
இலவங்கம் 2
பட்டை 1 இன்ச்
அண்ணாச்சி மொக்கு 2
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1 /2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 1 1/2 கப்
தயிர் 200 மில்லி
மிளகு 3
மிளகு தூள் 1 தேக்கரண்டி
காஷ்மீரி வரமிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி பொடி 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 1/2 தேக்கரண்டி

மற்றவை
சின்ன வெங்காயம் 12 ( அரைத்த விழுது )
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
தேங்காய் பால் 1 கப்
முந்திரி பருப்பு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை
1. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மட்டன் கொழுப்பை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் நெய் மாதிரி பிரிந்து வரும் அது வரை வதக்கவும்.

2. அதில் கிராம்பு, பட்டை, அண்ணாச்சி மொக்கு மற்றும் மிளகை சேர்த்து நன்கு வதக்கவும்.

3.. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பிறகு பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் அது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் கிளறவும்.

5. இப்பொழுது கறியின் தன்மைக்கேற்ப தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி 1 அல்லது 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கறி பாதியளவு வேகும் அளவுக்கு இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு இறக்கி வைக்க வேண்டும்.

6. அடுப்புல ஒரு அகன்ற பரந்த வடச்சட்டியை வைத்து அதனுள் பிரஷர் குக்கரில் உள்ள கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் தயிரை ஊற்றி நன்றாக கலந்து 5 நிமிடங்கள் கிளறி விடவும். பிறகு அதில் சின்ன வெங்காய விழுதை ஊற்றி நன்றாக பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறவும்.

7. அதில் முந்திரி பருப்பின் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும். இந்த கலவை நன்கு கொதிக்க விடவும்.

8. இச்சமயத்துல கரம்மசாலா தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க விடவும். கறி நன்றாக வேகும் வரை மேல் மூடியை மூடி சிறு தீயில் மட்டன் குழம்பை கொதிக்க விடவும்.

9. கறி வெந்தவுடன், குழம்பு காரத்தன்மை மற்றும் உப்பை சரி பார்த்து கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

குறிப்பு

1. ஆட்டு கறி கொஞ்சம் முத்தாலாக இருந்தால் குழம்பின் ருசி கூடும்.

2. கறி வாங்கும் போது ஆட்டின் முன்னங்கால் தொடையை வாங்கவும் இல்லையெனில் பின்னந்தொடையையும் வாங்கலாம். பின்னந்தொடை கறி கொஞ்சம் முத்தாலாக இருக்கும் பட்சத்தில் கறி கொஞ்சம் சக்கையாக இருக்க கூடும்.

Post a Comment