கறி பிரியாணி

Loading...
Description:

13524410_1041824399197949_6130628838163047313_n


இந்த சந்தை கறி பிரியாணி வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.

சரவணன் குடும்பத்தினர் இந்த பிரியாணி செய்வதில் மிகவும் பிரபலம். சரவணன் இப்பொழுது திருப்பத்தூர் ஏஜிஎஸ் மாலில் இரண்டாவது தளத்தில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.

தேவையான பொருட்கள்
மட்டன் 500 கிராம்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
வெங்காயம் 3 பெரியது ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1 /4 தேக்கரண்டி
மிளகு தூள் 1 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி

பிரியாணிக்கு
புல்லட் பச்சை அரிசி 3 கப்
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 6 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
பிரிஞ்சி இலை 2
ஏலக்காய் 2
இலவங்கம் 2
அண்ணாச்சி மொக்கு 3
கொத்தமல்லி தழை 1 கைப்பிடி
புதினா இலைகள் 1 கைப்பிடி
தயிர் 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
உப்பு தேவையான அளவு

செய்முறை

மட்டன் கலவைக்கு

1. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெய்யை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பின்பு பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

2. பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சீரகத்தூளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. பிறகு தயிரை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும். சிறிது நேரம் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

4. பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.

5. ஆவி அடங்கியதும் அதில் மிளகு தூள், கரம்மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வேகவைக்கவும். அதில் அதிகமாக தண்ணீர் இருந்தால் அது சுண்டும் வரை குக்கரின் மூடி போடாமல் கொஞ்சம் நேரம் கொதிக்க விடவும்.

6. அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.

பிரியாணிக்கு

7. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அண்ணாச்சி மொக்கு, காஜ்சுபத்திரி, பிரிஞ்சி இலையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

8.அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

9. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தயிரை ஊற்றி நன்றாக கலந்து வதக்கவும். கிளறி கொண்டே இருக்கவும் நன்கு வேகவைக்கவும்.

10. அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதில் உப்பு மற்றும் அரிசியை கழுவி அதில் போடவும். ( அரிசியை கழுவி சுத்தம் செய்து அதை 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும் )

11. இப்பொழுது வேகவைத்துள்ள மட்டன் கலவையை அரிசி கலவை பாத்திரத்தில் சேர்க்கவும். நன்றாக கலக்கவும் அதில் உப்பையும் சேர்த்து சரி பார்த்து கொள்ளவும்.

12. பிரியாணி சாதத்தை வேக வைத்து கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் ஒரு தோசை கல்லை வைத்து அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஒரு சுடுதண்ணி பாத்திரத்தை வைத்து கொள்ளவும்.

13. 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தி விட்டு பிரியாணி மசாலா நன்றாக கலந்து விடுமாறு கலக்கவும்.

14. சுவையான சந்தை பிரியாணி ரெடி! !

Post a Comment