கத்திரிக்காய் வேர்கடலை குழம்பு

Loading...
Description:

15079034_1147094352004286_2840810410498262376_n


இந்த குழம்பு குறிப்பாக எனது தந்தைக்கு மிகவும் பிடித்த உணவாகும்.

உங்களுக்கு நல்லெண்ணெய் பிடிக்கவில்லை என்றால் மரசெக்கு கடலெண்ணய் பயன்படுத்தி கொள்ளலாம்.

மிகவும் சத்தான ஊட்டசத்துமிக்க உணவாகும். இதை நீங்கள் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் தாரளமாக உண்ணலாம்.

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் 1/4 கிலோ
வேர்கடலை 100 கிராம்
புளி 1 எலுமிச்சை பழஅளவு
சின்னவெங்காயம் 18 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
சாம்பார் தூள் 1 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 1/4 தேக்கரண்டி
வெங்காய வடகம் 1/4 தேக்கரண்டி
வெல்லம் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
நல்லெண்ணெய் 1/4 கப்

செய்முறை
1. புளியை 1/2 கப் சுடு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும், பின்பு அதை பிழிந்து புளி சாறை எடுத்து கொள்ளவும்.

2. இப்பொழுது கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். நிறம் மாறாமல் இருக்க கத்திரிக்காய்யை தண்ணீரில் ஊறவைக்கவும்.

3.1 பச்சை வேர்கடலையாக இருந்தால் தண்ணீரில் கழுவி பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு கொள்ளவும்.

3.2 காய்ந்த வேர்கடலையாக இருந்தால் அதை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு அடுத்த நாள் பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு கொள்ளவும்.

4. ஒரு வடசட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காய வடகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி கூழ்போல் ஆகு‌ம் வரை வதக்கவும். பின்பு கத்திரிக்காய் அரை வேக்காடு ஆகும் வரை வதக்கவும்.

7. பிறகு அதில் வேகவைத்துள்ள வேர்கடலையை சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும். பின்னர் அதில் வரமிளகாய் தூள் , சாம்பார் தூள் மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8.இந்த கலவை பொடிகள் நன்றாக கலந்து விட்டது என்று உறுதிபடுத்தி கொள்ளவும். இந்த கலவை நன்கு ட்ரை யாகும் வரை வதக்கவும்.

9. இப்பொழுது புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தண்ணீரூம் சேர்த்து , அதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து , மஞ்சள்தூளை யும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

10. அதன் மீது மூடியை மூடி 10 நிமிடங்கள் வரை சிறுதீயில் கொதிக்க வைக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெல்லத்தை சேர்த்து சிறுதீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்.

Post a Comment