கத்திரிக்காய் சாப்ஸ்

Loading...
Description:

https://2.bp.blogspot.com/-MU35l_-pr7E/WHBFbd-AKzI/AAAAAAAAAPw/jGGdFxd2tfg8_2VqAIM-CGSCpxskOORNgCLcB/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg

இந்த கத்திரிக்காய் சாப்ஸ் , எங்கள் வீடுகளில் மிகவும் பிரபலம். பிஞ்சு கத்திரிக்காய் கிடைத்து விட்டால், எங்கள் வீட்டில் ஒன்று எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இல்லையெனில் கத்திரிக்காய் சாப்ஸ் தான்.

தேவையான பொருட்கள்
பிஞ்சு கத்திரிக்காய் 500 கிராம்
மரசெக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கைப்பிடி
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது )
சின்ன வெங்காயம் 6 ( அம்மிகல்லில் நசுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 30
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பட்டை 1 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
இலவங்கம் 4
அண்ணாச்சி மொக்கு 1
கொத்தமல்லி விதை 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 8
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது)
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 3/4 மேஜைக்கரண்டி
வறுத்த வேர்கடலை 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
பூண்டு பற்கள் 8
இஞ்சி 1 இன்ச்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. முதலில் மசாலா அரைக்க கொடுத்துள்ளபொருட்களை ,மிக்ஸியில் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் சேர்த்து சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் ஒரு மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மசாலாவை வடச்சட்டியில் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அடுப்புல இருந்து இறங்கி ஆற வைக்கவும்.

3. பிஞ்சு கத்திரிக்காயை நன்றாக தண்ணீரில் அலசி அதனை நன்றாக கீரி கொள்ளவும். ஆனால் கத்திரிக்காய் கொத்தாக தான் இருக்க வேண்டும்.

4. இப்பொழுது கீறி வைத்துள்ள பிஞ்சு கத்திரிக்காய்னுள் அரைத்து ஆறவைத்துள்ள மசாலா கலவையை திணிக்க வேண்டும். நன்றாக மசாலாவை பூச வேண்டும்.

5. இரும்பு வடச்சட்டியை அடுப்புல வைத்து அதனுள் மரச்செக்கு கடலெண்ணய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் , சீரகம் சேர்த்து நன்றாக பொறிய வைக்கவும்.

6. அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

7. பிறகு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்த பின் , அதில் மசாலா நிரப்பபட்டுள்ள பிஞ்சு கத்திரிக்காயை சேர்த்து நன்றாக சிறுதீயில் வதக்கவும். துளிகூட தண்ணீர் சேர்க்ககூடாது.

9. தேவையெனில் மரச்செக்கு கடலெண்ணய்யை சுற்றி விட்டு நன்றாக சிறுதீயிலே வதக்க வேண்டும்.

குறிப்பு
வடச்சட்டியில் போட்டு வறுக்கும் சமயத்தில் கத்திரிக்காய் ஒடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Post a Comment