கத்தரிக்காய்-போண்டா புளிக் கூட்டு

Loading...
Description:

IMG_5714

தேவையானவை 

 • 4 கத்தரிக்காய்
 • 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,துவரம் பருப்பு
 • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • எலுமிச்சை  அளவு புளி
 • தேவையான அளவு உப்பு,எண்ணெய்

தாளிக்க :

 •  ஒரு டீஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு,வேர்க்கடலை
 • சிறிதளவு கறிவேப்பிலை

வறுத்து அரைக்க :

 • ஒரு டீஸ்பூன் தனியா
 • 3வர மிளகாய்
 • சிறிதளவு பெருங்காயம்
 • ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

போண்டா செய்ய :

 • 100 கிராம் உளுத்தம் பருப்பு (ஊற வைக்கவும் )

செய்முறை :

கத்திரிகாயை நறுக்கி ,மஞ்சள்தூள் சேர்த்து வேக  வைக்கவும்.துவரம்பருப்பு ,கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும்.வறுத்து அரைக்க எடுத்தவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து ,போண்டாவாக உருட்டி,எண்ணெயில் பொன்னிறமாக பொரித்துடுக்கவும்.
புளியைக் கரைத்து,வேக வைத்த கத்திரிக்காயில்  விட்டு,வேக வைத்து துவரம்பருப்பு,கடலைபருப்பை போடவும்.அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.உப்பி சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்குவதற்கு முன்பு போண்டாக்களை  போட்டு ஒரு முறை கிளறி இறக்வும்.தாளிக்க எடுத்தவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

Post a Comment