கதம்ப சாம்பார் / Kadhamba Sambar

Loading...
Description:

Kadamba-Sambar-720x715

தேவையான பொருட்கள் :

 

துவரம் பருப்பு                      : 1 டம்ளர் (மஞ்சள் பொடியுடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்)

மஞ்சள் பொடி                      : 1 டி ஸ்பூன்

புளி                                            : 1 எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)

சாம்பார் பொடி                    : 1 1/2 டி ஸ்பூன்

உப்பு                                         : தேவையான அளவு

காய்கறிகள்                          : கலவையாக 1/4 கிலோ நறுக்கிக்கொள்ளவும் – (அவரைக்காய்,                                                                                 பரங்கிக்காய், பூசணிக்காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளிகிழங்கு, காரட், குடை                                                         மிளகாய்)

மொச்சை or  பட்டாணி   : 1 கப்

 

வறுத்து அரைக்க :

 

மிளகாய் வற்றல்             : 5 Nos

தனியா                                  : 2 டி ஸ்பூன்

கடலை பருப்பு                  : 2 டி ஸ்பூன்

பெருங்காயம்                    : 1 துண்டு

வெந்தயம்                          : 1 டி ஸ்பூன்

தேங்காய்                            : 1/2 மூடி

எண்ணை                            : தேவையான அளவு

கடுகு                                     : 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை     : சிறிது

 

செய்முறை :

 

  • நறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • 10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.
  • கடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.


Post a Comment