கணவா கிரேவி,tamil samayal

Loading...
Description:

கணவா – அரை கிலோ
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
மஞ்சள்பொடி – கால் தேக்கரண்டி
மிளகாய்பொடி – இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா – 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – மூன்று
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
மல்லி தழை – சிறிது
தாளிக்க – கறிவேப்பிலை, பட்டை, எண்ணெய்
உப்பு – தேவையானளவு

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கணவாவை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் பொடி சிறிது சேர்த்து பிசைந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

பச்சை வாசம் போகும் வரை வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து தக்காளி சேர்க்கவும்..

தக்காளி குழைய வதங்கியதும், அதில் கணவாவை போட்டு கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி பின் உப்பு, மல்லி தழை சேர்த்து அரை டம்ளர் நீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.

பின்னர் திறந்து நீர் இருந்தால் அதை அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.

சுவையான கணவாய் கிரேவி தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். காரம் அதிகம் வேண்டுமென்றால் மிளகாய் பொடி கூடுதலாக சேர்க்கலாம்

Post a Comment