கட்லா மீன் வறுவல்,tamil samaya

Loading...
Description:

ஒகேனக்கல்ல இரண்டு விஷயம் மிகவும் பிரசித்தம் ஒன்று நல்லெண்ணய் மசாஜ் இரண்டாவது அங்குள்ள பெண்கள் சமைக்கும் மீன் வருவல். எந்த பொடி வகைகளையும் கலந்து பொறிக்காமல் பாரம்பரிய முறைப்படி கிராமியத்து பாணியில் இருக்கும்.

அம்மிகல்லில் மசாலா கலவையை அரைத்து அதனுடன் மீனை பிசிறி வெயிலில் காய வைத்து வேர்கடலை எண்ணெய் ல பொறித்து முறுகலாக சுவையாக கொடுப்பார்கள்.

சுவையில் உங்கள் சொத்தை எழுதி வைக்க தோன்றும் !!!!

தேவையான பொருட்கள்

கட்லா மீன் 500 கிராம்
மரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 22
அரிசி மாவு 1 தேக்கரண்டி
வரமிளகாய் 12
சீரகம் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
பூண்டு பற்கள் 12
குரு மிளகு 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பட்டை 1 இன்ச்
கிராம்பு 2
முட்டை 3
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை

1. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்துகோங்க ஆனால் முட்டையை உடைத்து விட்டுகோங்க நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்க கூடாது. தேவைக்கேற்ப முட்டையை வேண்டுமென்றால் உடைத்து ஊற்றி கொள்ளலாம்.

2. கட்லா மீனை நன்றாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

3. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக மசாலாவுடன் பிசிறி கொள்ள வேண்டும்.

4. இந்த கலவையை நன்றாக வெயிலில் வைத்து உளற வைக்க வேண்டும்.

5. பிசிறி வைத்துள்ள மசாலா நன்றாக கட்லா மீனில் ஒட்டிவிட்டது என்று உறுதிபடுத்திய பின்னர் , வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மீன் துண்டுகளை போட்டு சிறுதீயிலே நன்றாக வேகவைத்து , குறிப்பாக நன்றாக பொன்னிறமாக முறுகலாக வறுத்து எடுத்து பரிமாறவும்.

6. பிறகு அதில் பொறித்த மீனுடன் நறுக்கிய வெங்காயத்துடன் பரிமாறவும்.

Post a Comment