கடலைக் குழம்பு

Loading...
Description:

கடலைக் குழம்புதேவையானவை: கறுப்பு கொண்டை கடலை – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி தண்ணீர் – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: பட்டை – 2 துண்டு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: கொண்டை கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை நன்கு ஊறவிடுங்கள். ஊறிய கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீரை சேர்த்து, அதனுடன் கொண்டை கடலையையும் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். கடைசியில் சிறிது கறிவேப்பிலை சேருங்கள். புட்டும் கடலைக் குழம்பும் கேரள உணவுகளில் நம்பர் ஒன் காம்பினேஷன்

Post a Comment