ஓடக்கரை தோசை

Loading...
Description:

photos 419

தேவையான பொருட்கள் 


பச்சரிசி ………2 கப் 
புழுங்கல் அரிசி ……..1/2 கப் 
உளுந்து ………….1 கப் 
வெந்தயம் ..1 1/2 தேக்கரண்டி 
வடித்த அரிசி சாதம் …….1 தேக்கரண்டி 


செய்முறை :


அரிசி ,உளுந்து வெந்தயம் இவற்றை தனித்தனியே 
சுமார் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும் .

பிறகு ஊறிய பச்சரிசியில் ஒரு கைப்பிடியளவு 
எடுத்து கொஞ்சம் நீர் இருந்தால் போதும் 
அதனை மிக்சி சின்ன சட்னி ஜாரில்  மையாக 
அரைக்கவும் .
அரைத்த மாவை அடுப்பில் ஒரு கப் கொதி நீரில் இட்டு
 கரைத்து கஞ்சி போல காய்ச்சி எடுக்கவும் ..
எனக்கு கோந்து பேஸ்ட் போல வந்தது ..ஆனாலும் பரவாயில்லை 
அதை அப்படியே நன்கு ஆற வைக்கவும் 
.பிறகு கிரைண்டரில் வெந்தயம் பிறகு உளுந்து சேர்த்து 
 அரைத்து எடுக்கவும் 
பிறகு மீதமுள்ள பச்சை  அரிசி ./புழுங்கள் அரிசி .,வடித்த சாதம் 
இவற்றையும் அரைத்து ,வழித்து எடுத்து …….

…………….ஆறிய கஞ்சி + அரைத்த வெந்தய உளுந்து + 
அரைத்த பச்சை,புழுங்கல் அரிசி இவற்றை நன்கு கலந்து 
வைக்கவும் .
.உப்பு தோசை வார்க்கும்போது தான் சேர்க்கணும் .
மாவை சேர்த்து கலக்கும்போதே பட்டுபோல மென்மையாக 
இருந்தது .எனக்கு நம்மூர் செட் தோசை போலிருக்கு ..:))
வார்க்கும்போது கனமாக THICK  ஆக வார்க்கணும் .
                                                                                    

                                                                               


இந்த தோசையின் ஸ்பெஷாலிட்டி   ..சுட்டு வைத்து 
நான்கைந்து மணிநேரத்துக்கு பின்னும் 
மென்மையாகவே இருந்தது 
                                                                                         

                                                                     இது சம்பலுடன் 
                                          

 

 

Post a Comment