ஏலக்காய் டீ tamil samayal

Loading...
Description:

tea tamil

தேவையான பொருட்கள் :

பால் – இரண்டு டம்ளர்
தண்ணீர் – இரண்டு டம்ளர்
ஏலக்காய் – நான்கு
சர்க்கரை – எட்டு தேக்கரண்டி
டீ தூள் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை :

பால், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்,

ஏலக்காயை ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்டி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க விட வேண்டும்.

பிறகு டீ தூள் போட்டு இறங்கியதும் அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிக்கட்டவும். சூடான மாலை நேரம் பிஸ்கேட், சுண்டலுடன் குடிக்கவும்.

குறிப்பு :

இஸ்லாமிய இல்ல விசேஷங்களில் ஏலக்காய் டீ (அ) இஞ்சி டீ கண்டிப்பாக போடுவார்கள். ஒரு டிபன் அதுவும் சேமியா பிரியாணி, கறி தக்குடி என்றால் இந்த டீ இல்லாமல் இருக்காது. வெறும் பால் குடிக்க பிடிக்காதவர்கள் ஏலக்காய் பால் கூட காய்ச்சி குடிக்கலாம். ரொம்ப ஜோராக இருக்கும், கெஸ்ட் வந்தாலும் ஒரு வித்தியாசமாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ என்று வித விதமாக போட்டு கொடுக்கலாம். சர்க்கரை கம்மியாக குடிப்பவர்கள் ஒன்றரை தேக்கரண்டியாக குறைத்து கொள்ளலாம்

 

Post a Comment