எலும்பில்லாத மட்டன் சுக்கா tamil samayal

Loading...
Description:

எலும்பில்லாத மட்டன் சுக்காஎன்னென்ன தேவை?

எலும்பில்லாத மட்டன்-1கிலோ
வெங்காயம்- 5 நறுக்கப்பட்டது
பூண்டு, இஞ்சி பேஸ்ட் – 2டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையானஅளவு
தக்காளி-4
மிளகாய்-2
உப்பு-தே.அளவு

மட்டன் மசாலா செய்ய:

சிகப்பு மிளகாய்- 5,
மிளகு- 1டீஸ்பூன்,
பெருஞ்சீரகம்- 1டீஸ்பூன்,
ஏலக்காய்- 4,
சீரகம்- 1டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு- சிறிதளவு,
மல்லி- 2டீஸ்பூன்
எண்ணெய்- 1டீஸ்பூன்,

எப்படி செய்வது?

எலும்பில்லாத மட்டனுடன் மஞ்சள்தூள், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து  அதில் மட்டனை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும். கடாயில் மசாலா செய்ய வைத்திருக்கும் பொருட்களை போட்டு  வறுக்கவும். வறுத்த மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிகொள்ளவும்.

பின்னர்  அரைத்து வைத்துள்ள மசாலாவை 2டீஸ்பூன் சேர்த்து கிளறவும். 2நிமிடம் கழித்து கிளறிய மசாலாவுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.  வேகவைத்த மட்டனை எடுத்து கடாயில் வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்(மட்டன் வேகவைத்த தண்ணீர்) ஊற்றி மீதமுள்ள  மசாலாவை கலந்து போதுமான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கவும்.. சுவையான மட்டன் சுக்கா தயார்.

Post a Comment