எதிரி தொலைக்காட்சிக்கு மாறிய டிடி? – காரணம் தெரியுமா?: ரகசியம் தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்

Loading...
Description:

பிரபல ரிவியில் தொகுப்பாளினி என்றால் மக்கள் மனதில் முதலில் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது அனைவருக்குமே தெரியும்.மற்ற தொகுப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழும் திவ்யதர்ஷினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு.

பள்ளி பருவத்தில் இருந்தே பிரபல ரிவிக்கு மட்டுமல்லாமல் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது குடும்ப பிரச்சினைகள் காரணமாக ரிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த டிடி அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலிருந்தும் விலகினார்.

அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியினை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். குடும்ப பிரச்சினைகளில் இருந்த இவர் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரே தொலைக்காட்சியில் இருந்த டிடி தற்போது அந்த தொலைக்காட்சிக்கு எதிரான தொலைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தொலைக்காட்சியில் தான் வேலை செய்து வந்தார். ஆனால் தற்போது அந்த தொலைக்காட்சிக்கு எதிரான தொலைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்குகொண்டுள்ளார்.

ஆனால் இதற்கு காரணம் என்னவென்றால் இளையராஜாவின் பெரிய ரசிகையாம் டிடி. அந்நிகழ்ச்சியில் இளையராஜாவினை பெருமைபடுத்தும் விதமாக அவரது பாடல்களை பாடும் போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவதற்காகவும், இளையராஜாவிற்காகவும் மட்டுமே டிடி அங்கு சென்றுள்ளாராம்.

Post a Comment