எண்ணெய் கத்திரிக்காய்

Loading...
Description:

13495044_1040143699366019_1543914796278609894_n


இது ஆந்திர -தமிழக எல்லை பகுதிகளில் மிகவும் பிரசித்தம்.

ஆம்பூர் மற்றும் ஆற்காடு பிரியாணியின் சைட் டிஸ் இதுதான்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் ஊறவைக்க

பிஞ்சு கத்திரிக்காய் 250 கிராம்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் கத்திரிக்காய் மூழ்கும் அளவுக்கு

மற்ற
வெங்காயம் 1 பெரியது ( பொடியாக நறுக்கியது 1/2 கப் )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
கடலை எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
தண்ணீர் 2 கப்
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
உப்பு தேவையான அளவு
வெல்லம் 3 தேக்கரண்டி

புளி கரைசல்
புளி 1 எலுமிச்சை அளவு
சுடு தண்ணீர் 1/2 கப்

மசாலா அரைக்க
வேர்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

செய்முறை

1. புளியை சுடு தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக கரைத்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து வேர்கடலை போட்டு நன்றாக வதக்கவும், தேங்காய் துருவல், வரமிளகாய், வெந்தயம், சீரகம், கொத்தமல்லி விதை போட்டு நன்றாக வதக்கவும்.

3. இந்த கலவை நன்கு வதக்கவும் அதில் ஒரு மணம் வீசும் வரை வதக்கவும்.

4. பின்னர் இந்த கலவையை ஆற வைத்து, பின் அந்த கலவையை மிக்ஸியில் போட்டு புளி கரைசலை விட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது கத்திரிக்காயை எண்ணெய் கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் நறுக்கி உப்பு தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

6. பிறகு அந்த தண்ணீரில் இருந்து வடித்து கத்திரிக்காயை எடுத்து அதனுள் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை கத்திரிக்காய் உள் வைத்து ஸ்டப் செய்யவும்.

7. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும். அதில் உளுத்தம்பருப்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும் .

8 .பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கறிவேப்பிலையை சேர்க்கவும்.

9. பிறகு மசாலாவில் ஊறவைத்த கத்திரிக்காயை எண்ணெய்ல போட்டு நன்றாக வதக்கவும்.

9. பிறகு மீதமுள்ள அரைத்த மசாலா கலவையை சேர்க்கவும் அதில் 2/3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.

10. தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.

11. பிரஷர் குக்கரை மூடி ஒரு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலைகள தூவி இறக்கவும்.

குறிப்பு

1. இஞ்சி-பூண்டு விழுது அரைக்க இஞ்சி 1 இன்ச் மற்றும் 20 பூண்டு பற்கள் சேர்த்து அரைக்க வேண்டும்.

Post a Comment