உருளைகிழங்கு 65

Loading...
Description:

இந்த சமையல் முயற்சியும் எங்கள் அண்ணன். சுப்பையா நாயுடுவையே சேரும்.

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு 200 கிராம்
மைதா மாவு 2 தேக்கரண்டி
அரிசி மாவு 3 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காய விழுது 1 தேக்கரண்டி
காஷ்மீரி வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழ சாறு 2 தேக்கரண்டி
தயிர் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

செய்முறை
1. உருளைகிழங்கை தண்ணீரில் நன்றாக அலசி , பொடியாக நறுக்கி பிரஷர் குக்கரில் அரை வேக்காடு வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

2. உருளைகிழங்கு மேல் தோலையும் நீக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பிசிறி கொள்ளவும். அதில் சின்ன வெங்காய விழுது சேர்த்து நன்றாக பிசிறி வைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது உருளைகிழங்கில் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்துகோங்க , அதில் அரிசி மற்றும் மைதா மாவு, எலுமிச்சம்பழ சாறு , தயிர் சேர்த்துகோங்க நன்றாக பிசைந்து கொள்ளவும்.

4. இப்பொழுது வடைச்சட்டியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருளைகிழங்கு கலவையை போட்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். எண்ணெய்ல இருந்து எடுக்கும் வேலையில் பொடியாகநறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை எண்ணெய்ல போட்டு நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

5. அதன் மேல் குரு மிளகு தூள் மற்றும் உப்புத்தூள் தூவி பரிமாறவும்.

Post a Comment