உப்புமா

Loading...
Description:

11252173_435138369997911_5694059008122191632_n

 

உப்புமா (அ) உப்பிண்டி (அ) உப்பிட்டு தென்னிந்தியாவின் மிக பிரபலமான காலை உணவாகும். இது எளிய செய்முறையில் துரிதமாக செய்யபட்டாலும், மிகவும் ருசியான சிற்றுண்டியாக கருதப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் செய்யபட்டாலும், நான் எளிய அடிப்படையில் ரவை கொண்டு செய்யப்படும் செய்முறையை விளக்கி இருக்கிறேன். சர்க்கரை, ஊறுகாய், சட்டினி மற்றும் சாம்பாருடன் இதை நன்கு ருசிக்கலாம்.

தேவையான செய்பொருள்கள் :

ரவை – 2 கப்
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணை – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுந்து – கால் தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு
நறுக்கிய தக்காளி – பாதி
கறிவேப்பிலை – 1 கூறு
கொத்தமல்லி – கை அளவு
உப்பு -தேவைக்கேற்ப்ப
துருவிய தேங்காய் – கால் குவளை (விரும்பும் பட்சத்தில்)
வெந்நீர் – 4 கோப்பைகள்

செய்முறை :

1) ஒரு சூடான வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு, அதில் ரவையை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

2) நறுமணம் வந்தவுடன், அடுப்பை அணைத்து விட்டு, ரவையை ஒரு தட்டில் மாற்றி கொள்ளவும்.

3) பின்பு அதே வாணலியில் எண்ணையை சுடவைத்து, கடுகையும் உளுந்தையும் சேர்க்கவும்.

4) கடுகு வெடித்தவுடன், அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலயை சேர்த்து விடவும்.

5) வெங்காயம் நன்றாக சிவந்தவுடன், தக்காளியை சேர்த்து நன்கு வறுக்கவும்.

6) அதன் பிறகு 4 கோப்பை வெந்நீரை கலந்து, சுவைக்கேற்ப்ப உப்பை போடவும்.

7) பாத்திரத்தை மூடிவிட்டு 3 நிமிடங்கள் நீர் கொதிக்கும் வரை சமைக்கவும்.

8) இப்பொழுது ரவையை சிறிது சிறிதாக அந்த கொதி நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

9) அடுப்பின் ஜ்வாலையை மெலிதாக்கி , 3-4 நிமிடங்களுக்கு வேக விடவும்.

10) மூடியை திறந்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, சிறிது கொத்தமல்லியை தூவி, வேன்டுமென்றால் துருவிய தேங்காயையும் கலக்கவும்.

11) நன்கு ஒரு முறை கலந்து விட்டு , பாத்திரத்தை மூடி விட்டு 5 நிமிடங்களுக்கு பிறகு பரிமாறவும்.

Post a Comment