உப்புக்கறி

Loading...
Description:

a href=”https://3.bp.blogspot.com/-9A6SlxHl5Xc/WkBp0vzd-sI/AAAAAAAAA5I/GyLVjjm1O64Uq5xgWjTOghNbX-_iJBqoACLcBGAs/s1600/24293948_877897872375279_6985138941845297609_n.jpg” imageanchor=”1″ >

உப்புக்கறி

தேவையானப் பொருட்கள்
கறி – 250 கி
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மிளகாய் – 5
ப.மிளகாய் – 5
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
ம.தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி – சிறிது
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிது
எண்ணைய் – 50 கி

செய்முறை

1.சோம்பு,சீரகம்,மஞ்சள்தூள்,கசகசா,இஞ்சி,பூண்டு, எல்லாவற்றையும் அரைத்து கறியில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

2.ஒரு கடாயில் எண்ணைய் விட்டு பட்டை கிரம்பு,ஏலக்காய்,சோம்பை தாளிக்கவும்.

3.பிறகு பொடியாக அரிந்த வெங்காயம், கீறிய ப.மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.

4.பிறகு தக்காளி, கருவேப்பிலை போட்டு கறிக்கலவை கொட்டி நன்கு கிளர வேண்டும்.

5.வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூட வேண்டும்.

6.தண்ணீர் வற்றியவுடன் மிளகு தூள் சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

Post a Comment