உடல் பருமனாக இருப்பவர்களுக்கான சில டிப்ஸ்

Loading...
Description:

993312_531868796881086_548183161_n

வீட்டு வேலைகளைச் செய்யுங்கள் வீட்டு வேலைகளான துணி துவைப்பது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை தினமும் 1 மணிநேரமாவது செய்து வந்தால், 300 கலோரிகளை எரிக்கலாம். மேலும் இப்படி வீட்டு வேலைகளைச் செய்வதால், 30 சதவீதம் விரைவில் இறப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நடைப்பயிற்சி அளவுக்கு அதிகமாக உடல் எடையுடன் இருக்கும் பெண்கள், தினமும் 10 நிமிடம் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்பவர்களின் வாழ்நாள், நடை மேற்கொள்ளாத மக்களின் வாழ்நாளை விட 4 மடங்கு அதிகரிக்குமாம்.

சோடா பானங்கள் தினமும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட கார்போனேட்டட் பானங்களைக் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, இப்பாதிப்பு அதிகம் உள்ளதாம். எனவே குண்டாக இருப்பவர்கள், சோடா பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி குண்டாக இருப்பவர்கள், மாட்டிறைச்சியை அதிகம் உட்கொண்டு வந்தால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியான ஹாட் டாக்ஸ் போன்றவற்றை அன்றாடம் உட்கொள்வதைத் தவிர்ப்பது, பெருங்குடல் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். அதுமட்டுமின்றி ஜங்க் உணவுகளை குண்டாக இருப்பவர்கள் சாப்பிடக் கூட நினைக்கக்கூடாது. இப்படி இருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

திராட்சை திராட்சையில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. அவை தான் திராட்சைக்கு அடர் நிறத்தைத் தருகிறது. பாலிஃபீனால்கள் நிறைந்த பழங்களை உட்கொண்டு வந்தால், இதய நோயின் தாக்கம் குறைவதோடு, அல்சைமர் நோய் வருவது தடுக்கப்படும். மேலும்

இவை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.நண்பர்களுடன் ஊர் சுற்றுங்கள் தனிமையில் இருந்தால் தான், நாம் குண்டாக இருக்கிறோம் என்று மிகவும் வருத்தத்திற்கு உள்ளாவோம். ஆனால் அதுவே நண்பர்களுடன் இருந்தால், வருத்தம் என்பதை மறந்து, எப்போதும் புன்னகைத்தவாறே இருப்போம். இப்படி எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம்.

Post a Comment