உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை டீ! ,Lemon Tea For Weight Loss tamil

Loading...
Description:

06-lemon-tea

 உடல் எடையை குறைக்க நினைப்போர் காலை அல்லது மாலை வேளையில் டீ குடிக்க நினைத்தால், அப்போது எலுமிச்சை டீ செய்து குடிப்பது நல்லது. ஏனெனில் எலுமிச்சை டீயானது உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். மேலும் எலுமிச்சை டீ தொண்டையில் உள்ள தொற்றுகளை அழித்து தொண்டைக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். சரி, இப்போது எலுமிச்சை டீயை எப்படி செய்வதென்று பார்ப்போமா! Lemon Tea For Weight Loss
தேவையான பொருட்கள்:
டீ தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1 பட்டை – 1/2 இன்ச்
தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் டீ தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பட்டை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் அதனை வடிகட்டி குடித்தால், சுவையான எலுமிச்சை டீ ரெடி!!!

Post a Comment