உடலில் உள்ள தேவையில்லாத சதையை குறைக்கும் பயிற்சிகள்

Loading...
Description:

fe010164-c484-4ea8-874e-e346b0e8197c_S_secvpf.gifஇன்றைய பெண்கள் உடல் ஸ்லிம்மா, அழகா இருக்கணும் என்று ஆசைப்படுகிறார்கள். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் கடினம்.

இவர்கள் மெதுவாக தான் உடல் எடையை குறைக்க முடியும்.   தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகளை பார்க்கலாம்.

அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:

இடுப்பில்:

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மிக முக்கியம். நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 20 முறை செய்யவும். இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும். தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் தனித்தனியாவும், பின் கால்களை சேர்த்தும் தூக்கவும். இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.

இடுப்பு மற்றும் தொடைக்கு:

சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 15 முறையாவது மாடிப்படி ஏறி இறங்க வேண்டும்.

நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி இவ்வாறு செய்ய வேண்டும்.

நன்றாக நடக்க வேண்டும்.  அருகில் இருக்கும் கடைக்கு வண்டியில் போகாமல் நடந்து போக பழகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நடைபயிற்சியை மேற்கொண்டால் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.

கைகளுக்கு:

இதற்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை நீங்களே செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும் போன்றவை நல்ல பயிற்சிகள். முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 20 முறை செய்யவும். முகத்தை இடது-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது… இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் ந

Post a Comment