உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வீட்டிலேயே செய்யலாம் பயிற்சி

Loading...
Description:

3ec09e9f-38ae-4a37-902d-4cc187071d8c_S_secvpf.gifஎளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, வீட்டில் ‘புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும்.

இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும். அதே சமயம் கடுமையான வலியும் இருக்கும். தினமும் இதைச் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். அதன் பிறகு, ‘ஆப்ஸ் வொர்க் அவுட்’.

வயிற்று பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க இரு கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து உடலை முன்னும் பின்னுமாக, படுத்துக் கொண்டே உயர்த்த வேண்டும். இது போன்ற எளிய வழிமுறைகளால் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கிவிடலாம்

Post a Comment