உங்க வாண்டுகளுக்கான இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்

Loading...
Description:

உங்க வாண்டுகளுக்கான இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்

சமைக்கும்போது சுவைக்காக சில சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதால் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன, மீதமுள்ளவற்றை நம்ம வாண்டுகள் ஒதிக்கிவசுர்றாங்க அவர்களுக்கான இயற்கை உணவு வகைகளை பார்ப்போம்.

பீட்ரூட் கீர்:

சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்காக வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம் வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத் தரலாம்.

வாழைப்பூ சட்னி:

நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி, சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நிக்கிய இஞ்சி, உப்பு கலந்து அரைத்தால். வாழைப்பூ சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் பயன்படுத்தலாம். ரத்தவிருத்திக்கு மட்டும்மல்ல நாகரீகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலையும் போக்கும் வாழைப்பூ.

புதினா ஜூஸ்:

கைப்பிடி அளவு புதினா தழைகளை நூறு கிராம் வெல்லம் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து  மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாருடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்தால் புதினா ஜூஸ் தயார் இதை தொடர்ந்தது குடித்துவர வளரிளம் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும் என்பதோடு, சிறுநீர் தொடர்பான தடை மற்றும் எரிச்சலை இந்த ஜூஸ் குணமாக்கும்.

பழ சாலட்:

கொய்யாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்பிடியே சாப்பிட குடுங்கள். மாலை வேளையில் ருசிக்க தோதான இரத்தத்தை சுத்திகரிக்கும் ஸ்நாக்ஸ் இது.

நெல்லிக்காய் ஜூஸ்:

ஐந்து நெல்லிக்காய்களை எடுத்து கொட்டைகளை நீக்கி அதனுடன் இளநீர் நூறு கிராம் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டினால் நெல்லிக்காய் ஜூஸ் தயார். இதனை தொடர்ந்து குடித்து வர இரும்பு சத்து அதிகரிக்கும் முடி வேகமாக வளரும்.

Post a Comment