உங்கள் அக்குள் பகுதியில் இப்படி இருக்கிறதா? அப்படியென்றால் கவனம் தேவை

Loading...
Description:

உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நோய் எது என்றால் சர்க்கரை நோய் தான், அதிலும் 40 வயது ஆரம்பித்தவர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோய் ஒரு ஆபத்தான நோய், இது இதய நோய், பக்கவாத நோய்கள் போன்றவை வருவதற்கு காரணமாக அமைகிறது. இதனால் சர்க்கரை வியாதி வராமல் இருக்க வரு முன் காத்திடுவோம். அதற்கு தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அது உங்களை பாதிக்காமல் இருக்க உணவில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

உடல் உழைப்புகள், காய்கறிகள், நேரம் தவறாமல் சாப்பிடாது இருந்தால் என இருந்தால், சர்க்கரை நோய் பாதிப்புகுள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி அதிக துரித இனிப்பு வகைகளை கைவிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உங்களுக்குசர்க்கரை வியாதி வந்திருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உங்களுக்கு ஜீன் குறைபாடு இருக்கிறது. மீண்டும் நிரந்தரமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்கு பிறந்த குழந்தை 4. 5 கிலோவிற்கும் அதிகமாக பிறந்தால் , பிற்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவம் கூறுகின்றது.

உங்கள் அக்குள் பகுதியில் கருப்பாக மடிப்புகள் இருந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி ஆகும். இது ஒரு சரும பிரச்சனை. மேலும் அக்குள் பகுதியில் உள்ள அந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும் கெட்டியாகவும் இருக்கும்.

Post a Comment