ஈஸி முட்டை குருமா

Loading...
Description:

தேவையான பொருட்கள்:

முட்டை -3
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
தேங்காய் துருவல் -அரை மூடி
சீரகம் ,மிளகுத் தூள் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லி தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா -அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
சோம்பு -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய்-தேவையான அளவு சோம்பு -1 டீஸ்பூன்

Step 2

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Step 3

பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீரகத் தூள்,மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.பின்பு non -stick இட்லி தட்டில் அடித்து வைத்த முட்டையை அதில் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு வேக வைத்த முட்டையை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.

Step 4

வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,மற்றும் கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதுகளை ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து கொள்ளவும்.பின்பு அதில் வேக வைத்த முட்டை துண்டுகளை அதில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.இதோ சுவையான ஈஸி முட்டை குருமா ரெடி.

Post a Comment