ஈஸி ஐஸ்க்ரீம்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

4, 2011

Homemade Ice Cream - Cooking Recipes in Tamil

கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது

செய்முறை:

* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.

* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.

* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.

* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.

* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.

* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.

குறிப்பு:

நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

Post a Comment