ஈர்க்கும் சுவையும் இரும்புச் சத்துமாக செய்யலாம் ஈரல் ஃப்ரை! #WeekEndRecipe

Loading...
Description:

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘ஈரல் ஃப்ரை’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மட்டன் ஈரல் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சைமிளகாய் – 1
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒன்றேகால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்புன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும். ஈரலை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பொடித்த சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய ஈரலைச் சேர்த்து நன்றாக வதக்கி, ஈரல் வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் சூடாகப் பரிமாறலாம்

Post a Comment