ஈரோடு மாஞ்சோலை மண்பானை விருந்து கொங்கு மட்டன் எலும்பு ரசம்

Loading...
Description:

https://4.bp.blogspot.com/-0x8PLdCtL1k/WaTTZgzi8bI/AAAAAAAAAn4/YZx3YE_ue48C9pX6PDwYpm_tOOB2O6NDgCLcBGAs/s1600/11e3512c-ecea-4506-91b4-7e3a777389ad-615×377-585×359.jpgதேவையான பொருட்கள்

ஆட்டு நல்லி எலும்பு – 1/2 கிலோ
கொழுப்பு – 150 கிராம்
ஆட்டு நெஞ்செலும்பு – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 150 கிராம்
தக்காளி – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் ( அம்மிகல்லில் விழுதாக நசுக்கியது )
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 14 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
வரமிளகாய் – 10
சீரகம் – 4 டீஸ்பூன்
மிளகு – 2 மேஜைக்கரண்டி
பட்டை – 4
பிரியாணி-இலை – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் – 15 பற்கள் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மரசெக்கு கடலை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1.ஒரு பிரஷர் குக்கரில் போட்டு ஆட்டு எலும்பு, ஆட்டு கொழுப்பு , ஆட்டு நெஞ்செலும்பு, மஞ்சள் தூள், சிறிது உப்பு, நசுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டையும், நசுக்கிய பச்சை மிளகாய் மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து நன்றாக 20 விசில் விட்டுகோங்க நன்றாக வேக வைக்கவும்.

2.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை,பிரியாணி இலை, வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

3. அதனுடன் இரண்டு வெங்காயம் , தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

4. அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியதும்.

5. கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Post a Comment