ஈசி குல்பி

Loading...
Description:

13015665_1013269272081957_6701404436870422971_n

கோடைகால ஈசி குல்பி

தேவையானவை :-

கண்டன்ஸ்ட் மில்க் – 1 டின்
ஃபுல் கிரீம் மில்க் – 1 டின்
பாதாம் ஊற வைத்து தோல் உரித்தது – 10
பிஸ்தா – 8
ஏலக்காய் – 3

செய்முறை :-

பாலையும் அதே அளவு கண்டன்ஸ்ட் மில்கையும் எடுத்துக் கொள்ளவும்.

கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் க்ரீம் மில்க் இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது பாதாம், பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும். மீதி பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அடித்த கலவையை மோல்ட் இருந்தால் அதில் ஊற்றி வைக்கவும். இல்லை என்றால் டம்ப்ளரில் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.

இந்த கலவையை 7 மணி நேரம் ப்ரீசரில் வைத்து விடவும். அருமையான ஈசி குல்பி தயார்.

Post a Comment