இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

Loading...
Description:

henna

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறிவரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கிவிடுகிறது.

 

சமச்சீரற்ற உணவுமுறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள்.

அவர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன். இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள்.

அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும். தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும். தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும்

Post a Comment