இலங்கை தமிழரை காதலித்து மணந்த பிரபல சீரியல் நடிகை

Loading...
Description:

href=”https://2.bp.blogspot.com/-3NNuvzw_yQo/Wnj_UuyuDrI/AAAAAAAABU0/VFvCctoYtOI4p90IXdEKVNDa6kEkU5gqACLcBGAs/s1600/27332197_1823837527913714_7142616121577808383_n.jpg” imageanchor=”1″ >பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகி வேடத்தில் கலக்கி வருகிறார் சரண்யா.

சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார், ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவரது கதாபாத்திர பெயரிலேயே கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.

அதுமட்டுமா சீரியல் இவர் அணிந்துவரும் உடைகளை பார்க்கவே தனிப்பட்டாளம் உள்ளதாம்.

யார் இந்த சரண்யா?
சரண்யாவின் நிஜப்பெயரும் சரண்யா தான், ஊடகவியலாளர், பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவத்துடன் பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

படித்து முடித்ததெல்லாம் சென்னையில் தானாம், MA Broadcasting Communication படித்துக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைக்க உடனே வேலையில் சேர்ந்து விட்டாராம்.

ஓர் ஊடகவியலாளராக செய்தி சேகரிக்க செல்லும் போது மக்களின் அவலங்களை கண்டு துயரில் ஆழ்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.

ஊடகவியலாளர், சீரியல், சினிமா என டிராக் சென்று கொண்டிருந்தாலும் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட சரண்யா இலங்கை தமிழரை காதலித்து மணமுடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டில் ஆக முடிவு செய்த சரண்யா, சீரியலில் கலக்கி வருகிறார்.

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் சரண்யா. திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். ஆனால் சென்னையில் தங்கி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Post a Comment