இறால் கறி

Loading...
Description:

தேவையான பொருட்கள்
div class=”separator” style=”clear: both; text-align: center;”>

இறால் – 1/2kg
சின்ன வெங்காயம் – 10 – 15
பூண்டு – 1
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1 – 2 tsp
சாம்பார் பொடி – 2 tsp
கறி தூள் – 1 tsp
மஞ்சள் தூள்
உப்பு
மிளகாய் வற்றல் – 2
பட்டை, லவங்கம், ஏலக்காய்
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
தேங்காய் பால் – 1/2கப்
எண்ணெய் – 2 tbsp

செய்முறை

இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் தடவி வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் மிளகாய் வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போகக் கொதிக்கவிடவும்.

கொதித்ததும் இறாலைச் சேர்த்து பிரட்டி வேகவிடவும்.

இறால் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான இறால் கறி தயார்.

Post a Comment