இனிப்பு பூந்தி செய்முறை | எளிய தீபாவளி இனிப்பு சமையல் ,dewali samayal,

Loading...
Description:

8168838590_c7d99a51bc_z

இனிப்பு பூந்தி செய்முறை tamil samayal.net
சமையல் முறை: இந்திய முறை | ரெசிபி வகை: இனிப்புகள் tamil samayal.net
தயாரிக்கும் நேரம்: 15 நிமிடங்கள் | சமையல் நேரம்: 35 நிமிடங்கள் | 5 கப் செய்யலாம்
தேவையான பொருட்கள் tamil samayal.net
பருப்பு மாவு / கடலை மாவு – 1 & 1/2 கப் tamil samayal.net
அரிசி மாவு 1/4 கப்
சமையல் சோடா (சோடிய tamil samayal.netம் பை கார்பனேட்) 1 சிட்டிகை
சர்க்கரை 1 & 1/2 கப் முதல் 2 கப் வரை (உங்கள் சுவைக்கேற்ப சேர்க்கவும்)
ரோஜா எசன்ஸ் (விரும்பினால்) 3 சொட்டு tamil samayal.net
ஏலக்காய் 1, தூளாக்கியது
கிராம்பு 2 tamil samayal.net
முந்திரி 8
நெய் 1 தேக்கரண்டி
பச்சை கற்பூரம் (விரும்பினால்) 1 கடுகு அளவு tamil samayal.net
உப்பு ஒரு சிட்டிகை
இனிப்பிற்கு நிறம் கொடுக்க‌ (விரும்பினால்) ஆரஞ்சு மற்றும் பச்சை tamil samayal.net
செய்முறை:
1. முதலில் சர்க்கரை பாகை தயார் செய்து கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, (தண்ணீர் ச்ர்க்கரை மூழ்கும் அளவிற்கு இருக்க வேண்டும்), நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து இந்த பாகு தயாராகி விட்டதா என்று பார்ப்பதற்கு உங்களுடைய கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையில் இந்த பாகை சிறிது லேசாக வைத்துப் பார்க்கும் போது அது பிசு பிசுவென்று ஒட்டினால் உங்கள் சர்க்கரை பாகு ரெடி என்று அர்த்தம், அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு கரண்டியில் சிறிதளவு பாகை இதில் சிறிதளவு ஊற்றினால் அது தண்ணீரோடு கலக்காமல் அப்படியே நகர்ந்து சென்றால் உங்களுடய பாகு ரெடி என்று அர்த்தம். இந்த 2 முறைகளில் நீங்கள் பாகு ரெடியா என்பதை கண்டுபிடித்துக் கொள்ளலாம். பாகு ரெடியானதும் உங்கள் அடுப்பை அணைத்து விடவும். tamil samayal.net
2, ஒரு பெரிய பாத்திரத்தில் பருப்பு மாவு, கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, தண்ணீர் இவற்றை எல்லாம் நன்கு கெட்டியாக கலந்து கொள்ளவும், பஜ்ஜி மாவு பதத்தில் இருக்குமாறு. ஒரு பெரிய கரண்டி அளவிற்கு மாவை, ஆரஞ்சு நிறம்  மற்றும் பச்சை நிறத்திற்கு ஆகும் அளவிற்கு தனித் தனியாக சிறிய கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொள்ளவும். tamil samayal.net
3, சூடாக்கிய எண்ணெயில் ஒரு பெரிய ஓட்டை கரண்டியால் பூந்தி தயார் செய்வது எப்படி என்று கீழே காட்டப்பட்டுள்ளது. இதற்கு உங்களுக்கு ஒரண்டு பெரிய ஓட்டை கரண்டிகள் தேவை, ஒன்று பூந்தி போட மற்றொன்று எண்ணெய் வடிய வைக்க. இன்னொரு கரண்டியை மாவு ஊற்ற பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். ஒரு கரண்டியில் மாவை எடுத்துக்கொளள்வும். ஒரு ஓட்டைக்கரண்டியை எண்ணெய்க்கு மேலாக பிடித்துக் கொள்ளவும், இப்போது கரண்டியில் உள்ள மாவை இந்த ஓட்டைக் கரண்டியில் ஊற்றவும்,
4. ஊற்றி விட்டு அதே கரண்டியால் ஓட்டைக் கரண்டியின் மீது கீழே காட்டியுள்ள படி தேய்த்து விடவும். பிறகு இதை ஒரே மாதிரி திருப்பி போட்டு பொரிக்கவும், ரொம்ப நேரம் முறுகலாகும் வரை பொரிக்க வேண்டாம், சப்தம் அடங்கும்வரை பொரித்தாலே போதும், மேலும் நன்கு மிருதுவாக வெந்ததும் இதை எடுத்து எண்ணெய் வடிக்கும் காகிதத்தில் போடவும், இதே மாதிரி மீதி உள்ள மாவையும் செய்து கொள்ளவும். tamil samayal.net
5. இப்போது 2 கிண்ணங்களில் எடுத்து வைத்த மாவில் ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணத்தை கலந்து கொள்ளவும். மேலே செய்த பூந்தியை போலவே இதையும் செய்து கொள்ளவும். tamil samayal.net
6. ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ண மாவை போட்டு முடித்ததும் எண்ணெய் வடிக்கும் காகிதத்தில் போடவும்,
7. இதை எல்லாம் முடித்ததும், சர்க்கரை பாகை சூடுபடுத்திக் கொண்டு (கொதிக்க விட வேண்டாம்), தயார் செய்து வைத்துள்ள எல்லா பூந்தியையும் இந்த சர்க்கரை பாகில் போடவும். முந்திரி, இலவங்கம் இந்த இரண்டையும் நெய்யில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரி, இலவங்கம், ஏலக்காய் பவுடர், ரோஜா எசன்ஸ், மற்றும் பச்சை கற்பூரம் அனைத்தையும் இந்த பூந்தியில் போட்டு கரண்டியால் நன்கு கலக்கவும்.
8. நன்கு ஆறும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும், பாகு முழுவதும் பூந்தியில் இறங்கியவுடன், பூந்தியானது பொன்பிறமாக்வும், உதிரி உதிரியாகவும் இருக்கும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்புகள்: tamil samayal.net
* எண்ணெயில் பூந்தி போடும் போது ஓட்டைக் கரண்டியை நன்கு தூக்கிப் பிடித்து மாவை ஊற்றவும், இல்லையென்றால், மாவானது ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளும். tamil samayal.net
* நிறங்கள் சேர்ப்பது உங்களுடைய விருப்பம். நிறம் சேர்க்காமலும் நீங்கள் செய்யலாம். tamil samayal.net
* கிராம்பு, பச்சைகற்பூரம் மற்றும் ரோஜா எசன்ஸ் சேர்ப்பது உங்களின் விருப்பம், வெறும் ஏலக்காயே நன்கு மணமாக இருக்கும். ஆனால், நான் இவை அனைத்தையும் விரும்பி போடுவேன். 🙂 tamil samayal.net
* உங்களுக்கு இனிப்பு இன்னும் அதிகம் வேண்டுமென்றால் சர்க்கரை இன்னும் 2 கப் அதிகமாக சேர்க்கலாம். ஆனால் 1 & 1/2 கப் சர்க்கரை இதற்கு சரியாக இருக்கும். tamil samayal.net
* அரிசி மாவு சேர்ப்பதும் உங்க‌ளின் விருப்பம், ஆனால் என்னுடய அனுபவப்படி அரிசி மாவு சேர்த்தால் நல்ல மணமாக இருக்கிறது. tamil samayal.net
* கரைத்த மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும், எனவே சரியான பதத்திற்கு தண்ணீர் சேர்த்து மாவை கலக்கவும். tamil samayal.net
* தண்ணீர் அதிகமாக கொண்டு மாவை கரைத்தாலும் பூந்தி சரி வராது. எல்லாம் தட்டையாக போய் விடும். இப்படி தண்ணீர் அதிகமாக இருந்தால் பருப்பு மாவை சேர்த்து சரி செய்யலாம். tamil samayal.net
* நீங்கள் திராட்சையையும் நெய்யில் பொறித்து சேர்க்கலாம்.

Post a Comment