இந்த 9 விஷயங்கள் ஒரு நபரின் ஆயுளை குறைத்து விரைவில் மரணிக்க செய்யுமாம்! Read more at: https://tamil.boldsky.com/insync/life/2018/things-that-will-decrease-your-life-span-019360.html

Loading...
Description:

a href=”https://1.bp.blogspot.com/-rnMHH4NVgqA/WnkEF0U_7GI/AAAAAAAABVc/sIrXfXQv8lgVeDZ0zN1CZKmx3j7tBh-6ACLcBGAs/s1600/mqdefault.jpg” imageanchor=”1″ >

சாகாவரம்! யார் தான் வேண்டாம் என்பார்கள்? குறைந்தபட்சம் நிம்மாதியான சாவு போதுமடா கூறும் நபர்களும் இருக்கிறர்கள். ஆனால், எதை நிம்மதியான சாவு என்கிறோம்? நோய்வாய் பட்டாலும் கூட பரவாயில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இறந்துவிட வேண்டும். இதுவா நிம்மதியான சாவு. நிம்மாதியான மரணம் என்பது இயற்கை மரணம். உறங்கிக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிவது தான் நிம்மதியான இயற்கை மரணம். ஆனால், இயற்கையை போலவே, இயற்கை மரணத்தையும் நாம் என்றோ தொலைத்துவிட்டோம். உங்களுக்கு நினைவிருக்கிறதா? எப்போது கடைசியாக இயற்கை மரணம் குறித்து கேள்விப்பட்டோம் என்று? சரி! மரணம் என்பது பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. அதை யாராலும் தடுக்க இயலாது. என்று மனிதன் சாகா வரத்தை எட்டிப்பிடிக்க நெருங்குகிறானோ, அன்று தனது அழிவை அவனே தேடிக் கொள்வான் என சான்றோர்கள் கூறுகிறார்கள். அதுப்போல, மனிதர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களும் மரணத்தை துரிதப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுகுறித்து தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்…

அதீத பெருமைக் கொள்தல் ஒருவரிடம் செல்வம் இருப்பது தவறில்லை. ஆனால், அதை மிகையாக வெளிப்படுத்துதல் தான் தவறு. அதிகப்படியான பெருமை குணம் உடையவர்கள், தங்களுக்கு கீழ் இருக்கும் மக்களை மதிக்க மாட்டார்கள். இதனால் ஈகோ அதிகரிக்கும். இந்த ஈகோவால் ஏற்படும் தாக்கங்கள் உங்களை ஆயுளை பல வகைகளில் பாதிக்கும். இதனால் உங்களுக்கு யாரும் உதவ முன் வராமல் கூட போகலாம். அதிகமாக பேசுதல்! அதிகமாக படிக்க வேண்டும், குறைவாக பேச வேண்டும் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ள பாடம். இதற்காக பேசாமல் இருக்க வேண்டும் என்று பொருளல்ல. ஆனால், எதுவாக இருந்தாலும் அதிகமாக பேச வேண்டாம். இதனால் உங்கள் வாழ்வில் அதிகப்படியான நேரத்தை நீங்கள் விரயம் செய்ய நேரிடலாம். மேலும், மற்ற நபர்களின் தவறுகளை, எதிர்மறை செயல்களை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருப்பது உங்களை ஆயுளை பாதிக்கும். ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று.

கோபம்! மனிதனிடம் வெளிப்படும் பல உணர்சிகளில் ஒன்று கோபம். ஆனால், எதையும் கட்டுப்படுத்த முடியும் என்ற தன்மை கொண்டவனே கோபம். கோபம் ஒரு மனிதனிடம் இருக்கும் வெற்றி, புகழ், உறவுகள் என பல முக்கியமான வற்றை கொன்று விடும். அதிகப்படியான கோபம் ஒரு நபரின் ஆயுளை குறைக்கும் என்கிறார்கள். இதற்கு அறிவியல் ஆதாரமும் இருக்கிறது. ஆம்! யார் ஒரு நபர் அதிகமாக கோபப்படுகிறாரோ… அவருக்கு இதய நோய்கள் மற்றும் இரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாம். ஒரு நபரின் ஆயுளை குறைக்க செய்யும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் இவை இரண்டும் முதல் இடங்கள் பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சுயநலம்! வாழ்க்கை என்பது பெறுவது மட்டுமல்ல, கொடுப்பதும் கூட. நீங்கள் நாலு பேரை வாழ்த்தினால் தான் அவர்கள் பதிலுக்கு உங்களை வாழ்த்துவார்கள். நீங்கள் நாலு பேர் வீட்டு விஷேஷங்களுக்கு சென்று வந்தால் தான், உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு யாராவது வந்து செல்வார்கள். அதாவது, நீங்கள் பொதுநலமாக நடந்துக் கொண்டால் தான், உங்களுக்கும் பலர் நன்மை நினைப்பார்கள். சுயநலம் என்பதும் ஒரு வகையில் நோய் தான். என்னிடம் இருப்பது எனக்கு மட்டும் தான் என்று வாழ்ந்து வந்தால்,ஆரம்பத்தில் உங்களிடம் பணம் பெருகலாம். ஆனால், கடைசியில் நோய் தான் பெருகும். அதாவது இந்த சமூகத்திற்கு நீங்கள் எந்த நல்லதும் செய்யாவிடில், இந்த சமூகமும் பதிலுக்கு உங்களுக்கு எந்த நல்லதும் செய்யாது. இதனால் ஆரம்பத்தில் சுயநலமாக இருக்கும் நீங்கள், கடைசியில் இந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் நிலைமை ஏற்படலாம்.
பேராசை! சுயநலம் இருந்தால், கூடவே இந்த பேராசையும் இருக்கும். எத்தனை தான் வாழ்வில் சம்பாதித்தாலும், அனுபவித்தாலும், பேராசை உங்களுக்கு நிம்மதியையும், திருப்தியையும் தரவே, தராது. பேராசை என்பது ஒருவர் மனதில் வளரும் அரக்கன். அந்த அரக்கன் முதலில் மற்றவர்களை அழிக்கும். கடைசியில் அந்த நபரையே அழித்துவிடும். எனவே, பேராசை குணத்தை கைவிடுங்கள். உங்களிடம் இருந்து சுயநலமும் விலகிப்போகும்.

துரோகம்! பகைவனுக்கு கூட மன்னிப்பு உண்டு, ஆனால், துரோகிக்கு மன்னிப்பே இல்லை. நாம் பிறருக்கு துரோகம் செய்யும் வரை அதன் தாக்கம் என்ன என்று தெரியாது. நமக்கு ஒருவர் துரோகம் செய்யும் போதுதான். அதன் வலியும், தாக்கமும் புரியும். அதிலும், நமக்கு நன்மை விளைவிக்கும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு துரோகம் செய்வது பாவத்திலும், பெரிய பாவம். இது நிச்சயம் கொடுமையான மரணத்தை பரிசளிக்கும். நேரம் ஒதுக்குதல்! வேலையை நேசிப்பது தவறல்ல. ஆனால், வேலையை மட்டுமே நேசிப்பது மிகவும் தவறு. ஒரு மனிதனின் மனநலம், உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் அவன் உட்கொள்ளும் உணவுகள் மட்டுமல்ல, அவனை சுற்றி இருந்து பேணிக்காக்கும் உறவுகளும், நண்பர்களும் தான்.
நீங்கள் எத்தனை தான் நேசித்தாலும், ஒரு நாளின் கடைசியில் உங்கள் வேலை உங்களுக்கு மன அழுத்தம், டென்ஷன் தான் கொடுக்கும். ஆனால், உறவுகளும், நண்பர்களும் மட்டுமே, உங்களை சிரிக்க வைப்பார்கள், நிம்மதி பெருமூச்சு விடவைப்பார்கள். எனவே, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் ஒதுக்க மறக்க வேண்டாம். உங்களை நீங்களே… சுயநலமாக இருப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு உங்களை நீங்களே மறந்து வாழ்வதும். எப்போதுமே மற்றவர் நலனுக்காக, மற்றவர் தேவைக்காக வாழ்ந்துக் கொண்டிருப்பதும் ஒரு நாள் உங்களை மனதளவில் சோர்வடைய செய்யும். இதனால், மனநலம் முதலில் பாதிக்கப்படும். பிறகு, உடல்நலம் பாதிக்கப்படும். இது,

உங்கள் மரணத்தை கொஞ்சம், கொஞ்சமாக வேகப்படுத்தும். என்ன செய்யலாம்? இந்த எல்லா விஷயங்களும் நாளைக்கே மரணத்தை ஏற்படுத்தி விடாது. ஆனால், இவற்றை எல்லாம் கைவிட்டு… ஒரு நிம்மதியான வாழ்க்கை நீங்கள் வாழ துவங்கினால், உங்கள் வாழ்வில் தெளிவு பிறக்கும், உங்கள் வாழ்க்கையின் தரம் உயரும். உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதுவே, உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்க தூண்டும். முக்கியமாக, இந்த தெளிவும், தரமும் உங்கள் வாழ்வில் இனிமை மற்றும் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

R

Post a Comment