இது இருந்தால் சினிமாவுக்கு வர ரெடி – அதிரவைத்த சரவணாஸ்டோர் அருள்

Loading...
Description:

சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்கள் பணத்தை முதலீடு செய்து பிசினஸ்மேனாக ஆவார்கள்.

அதேபோல தொழிலதிபர் ஒருவர் சினிமாவுக்கு வரவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தொலைக்காட்சியில் விளம்பரம் வந்ததும் இவரை பார்க்காமல் இருக்க முடியாது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கடந்த சில நாட்களாக தமன்னா, ஹன்சிகா என நடிகைகளோடு தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே தோன்றி நடித்து வருகிறார்.

இதையடுத்து இவர் சினிமாவுக்கு வரவிருக்கிறாராம். இதை சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் கூறியிருக்கிறார். இந்த விழாவில் நடிகர் சங்கத்துக்கு ரூ. 2.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீமன் நீங்கள் சினிமாவுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, பாசிட்டிவான, எனர்ஜிட்டிக்கான கதை அமைந்தால் சினிமாவில் நடிப்பேன் என்றும் எத்தனை கதாநாயகிகளோடு என்று கேள்விக்கு அதுவும் கதையை பொறுத்துதான் என்றும் கூறினார்.

விளம்பரத்தில் நடித்ததையே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment