இட்லி மாவு போண்டா

Loading...
Description:

13419240_1031099426937113_4614932435518181668_n

இன்று திடீர் என்று விருந்தாளி வந்து விட்டனர். என்ன செய்வதென்று யோசித்து, இன்று செய்தோம் ஒரு போண்டா விருந்தாளிகள் இந்த போண்டாவின் பெயர் என்ன. ஒரு புதிய சுவையோட இருக்கிறதே என்று சொன்னார்கள் மிகவும் மகிழ்ச்சி.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 2 கப்
வெங்காயம் – 1 பெரியது
வர மிளகாய் – 4 ( அரைத்தது )
உப்புத்தூள் தேவையான அளவு
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
கொத்தமல்லி இலை 10 இலை
சோடா உப்பு ஒரு சிட்டிகை
கருவேப்பிலை – 10
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை
1.வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வரமிளகாயை அரைத்துக் கொள்ளவும் .

3.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.நறுக்கிய பொருட்களை இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.

5. மிளகு, சீரகம் மற்றும் சோடா உப்பு அனைத்தையும் இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.

6.இட்லி மாவு லூசாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

7..கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.

8.எண்ணெய் சூடானதும் மாவில் சிறிது எடுத்து எண்ணெயில் இட்டு இருபுறமும் பொறித்து எடுக்கவும்.
பொன்னிறமாகும் வரை வேக விடவும்.

Post a Comment