இட்லிக்கு வைத்த மட்டன் குழம்பு

Loading...
Description:

இந்த குழம்பை எனது ஆத்தா காலை இட்லிக்கே வைத்து விடும்.

பெரும்பாலும் எங்கள் கிராமத்துல ஆடிமாதம் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் என்றாலே காலையிலேயே ஆவி பறக்கும் இட்லி உடன் வெள்ளாட்டு முன்னங்கால் கறி குழம்பு தான்.

சில சமயங்களில் நாங்கள் எங்கள் உறவினர்களை அழைத்து கிடா வெட்டி விருந்தும் வைக்கும் வழக்கமும் உண்டு.

இந்த குழம்பை இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். நாவிற்கு சுருக்கென்ற காரம். சுடச்சுட இட்லி. மிகவும் பிரமாதமாக இருக்கும்.

இதன் சுவை டக்கராக இருக்கும். சுவையில் அதிகமான இட்லி தானாக வயிற்றுக்கு உள் சென்று கொண்டே இருக்கும்.

தேவையான பொருட்கள்
வெள்ளாட்டு முன்னங்கால் கறி 600 கிராம்
மட்டன் சுத்து கொழுப்பு 150 கிராம்
சின்ன வெங்காயம் 14 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 5 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
தேங்காய் வில்லைகள் 2
சோம்பு 1 தேக்கரண்டி
வரமிளகாய் 12
குரு மிளகு 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பூண்டு பற்கள் 6
சின்ன வெங்காயம் 14
பட்டை 3
கிராம்பு 4
அண்ணாச்சி பூ 1

தாளிக்க

சோம்பு 1/2 தேக்கரண்டி
மராட்டிய மொக்கு 1

செய்முறை

1. இப்பொழுது மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்துகோங்க அதனுடன் குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக விழுதாக மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மராட்டிய மொக்கு மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. பிறகு அதில் மட்டன் சுத்து கொழுப்பை சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

4. இப்பொழுது நன்றாக மையமாக விழுதாக அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க அதனுடன் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

5. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.இத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. பிறகு அதில் மஞ்சள் தூள், வரமிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்துகோங்க அதனுடன் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

7. இச்சமயத்துல நன்றாக கழுவி வைத்துள்ள வெள்ளாட்டு கறியை சேர்த்துகோங்க நன்றாக 3 நிமிடங்கள் மசாலாவுடன் நன்றாக கிளறி வதக்க வேண்டும்.

8. அதில் தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். அதன்பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி 5 விசில் வரை விட்டுகோங்க.

9. அதன் பிறகு 15 நிமிடங்கள் அடுப்பை சிறுதீயிலே விட்டு கொதிக்க விட்டு அடுப்டை அணைத்து விடவும்.

Post a Comment