ஆம்பூர் பிரியாணி கத்திரிக்காய் கட்டா

Loading...
Description:


இது தான் வேலூர் மாவட்ட பிரியாணிகளின் சரியான பக்க உணவாகும்.

தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் – 10
.புளி – நெல்லிக்காய் அளவு (அ) புளி பேஸ்ட் – 1 தேக்கரண்டி
வெல்லம் – 2 சிறிய துண்டு (கடைசியில் சேர்க்க)

முதலில் தாளிக்க
மரசெக்கு கடலை எண்ணெய் – 3 மேஜை கரண்டி
மிளகு – 10
கருவேப்பிலை – 10 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
.உப்பு தூள் – தேவையான அளவு

வறுத்து பொடித்து கொள்ள :
வேர்க்கடலை – 3 மேஜைக்கரண்டி
எள் – 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை :

1.வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அதனை மைய பொடித்து கொள்ளவும்.

(கவனிக்க : வேர்க்கடலை + வெந்தயத்தினை முதலில் வறுத்த பிறகு எள் சேர்த்து வறுக்கவும்.எள் சீக்கிரமாக வறுப்பட்டுவிடும். நான் வேர்க்கடலையினை தோலுடனே அரைத்து கொண்டேன். விரும்பினால் தோல் நீக்கி கொள்ளவும்.)

2.கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கத்திரிக்காய் காம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர் பக்கம் வெட்டவும். இப்படி வெட்டினால் கத்திரிக்காய் உடையாமல் இருக்கும்.

3.வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு + கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

4.இத்துடன் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயினை சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.

5.பிறகு அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள்யினை சேர்த்து கிளறிவிடவும்.

6.புளியினை 1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். இப்பொழுது கத்திரிக்காயில் கரைத்து வைத்து இருக்கும் புளி கரைசலை ஊற்றி 4 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.

7. இப்பொழுது பொடித்து வைத்துள்ள பொடியினை கத்திரிக்காயில் சேர்த்து கலந்து விடவும்.

8. அனைத்து பொருட்களும் நன்றாக சேரும் மாறு கிளறிய பிறகு,அதனை கண்டிப்பாக தட்டு போட்டு மூடி சிறிய தீயில் சுமார் 8 நிமிடங்கள் வைக்கவும்.

9.இப்பொழுது எண்ணெய் தனியாக பிரிந்து வருவதே. அதுவே சரியான பதம் ஆகும். அப்பொழுது சிறிய வெல்லம் துண்டினை சேர்த்து கிள்றிவிடவும்.

(கண்டிப்பாக தட்டு போட்டு மூடி வேகவிடவும் அப்படி செய்தால் தான் எண்ணெய் தனியாக வரும். இல்லை என்றால் thick ஆக நிறைய நேரம் எடுத்து சுவையில் வித்தியசம் இருக்கும். )

10. சுவையான பிரியாணி கத்திரிக்காய் ரெடி.இதனை பிரியாணியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment