ஆனியன் ரிங்ஸ் tamil samayal

Loading...
Description:

tamil samayal ulakanஎன்னென்ன தேவை?

பெரிய வெங்காயம் – 250 கிராம்,
கடலை மாவு – 1 கப்,
சோள மாவு – 1 கப்,
மைதா மாவு – கால் கப்,
தயிர் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு விழுது – அரை
டீஸ்பூன், சாட் மசாலா – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
தேவைப்பட்டால் ஆரஞ்சு கலர்.

எப்படிச் செய்வது?  

வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் உரித்து வட்ட, வட்டமாக நறுக்கி தனித்தனியே பிரித்து எடுக்கவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தயிர்,  கடலை மாவு, சோள மாவு, மைதா, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். விருப்பப்பட்டால் கலர் பவுடர்  சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த தும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வட்டமாக வெட்டிய வெங்காய ரிங்கை மாவில்  தோய்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து, சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும்

Post a Comment