ஆண்ணபூர்ணா காரக் குழம்பு

Loading...
Description:

14199698_1083917998321922_7237587165026560644_n

இந்த காரக் குழம்பை இந்த பகுதியில் புளி வற்றல் குழம்பு என்று கூறுவர்.

இந்த குழம்பு காரசாரமாக நச்சுன்னு நல்ல மணத்துடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்
புளி 1 எலுமிச்சை பழ அளவு
துருவிய வெல்லம் 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 18 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
உப்பு தேவையான அளவு
சுண்டைக்காய் வற்றல் 15

மசாலா அரைக்க
வரமிளகாய் 3
கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 6
பூண்டு பற்கள் ,
துருவிய தேங்காய் 1/3 கப்
தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது )
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி

தாளிக்க
நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வரமிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை 1 கொத்து
சுண்டைகாய் வற்றல் 12

செய்முறை
1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசல் எடுத்து கொள்ளவும்.

2. ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வரமிளகாய், கொத்தமல்லி விதை, கடலைபருப்பு, மிளகு, சீரகம், சோம்பு , சீரகம், நன்கு வறுத்து பொன்னிறமாக மாறியதும், அதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பிறகு வடச்சட்டியில் வறுத்த பொருட்களை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

4. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுண்டைகாய் வற்றல் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

5. இப்பொழுது 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைபருப்பு மற்றும் கிள்ளிய வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

6. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் நன்கு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு தூளையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். இதற்கு குறைந்தது 5 நிமிடங்கள் எடுத்து கொள்ளும்.

8. இப்பொழுது அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீரும், துருவிய வெல்லத்தையும் சேர்த்து நன்றாக சிறுதீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

9. நன்றாக கொதித்து மனம் வீச தொடங்கியதும் , அதில் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றல்லை குழம்பில் கொட்டி 1 நிமிடம் கொதிக்க வைத்து. அடுப்பை அணைக்கவும்.

10. இப்பொழுது சுடு சாதத்துடன் பரிமாறவும்.

Post a Comment