ஆட்டு நுரையீரல் பிரட்டல்

Loading...
Description:

ஒடையகுலம் கவுண்டர் வீட்டு ஆட்டு நுரையீரல் பிரட்டல்

ஓடையகுலம் என்பது பொள்ளாச்சியை கடந்து ஆனைமலை மற்றும் மாசாணியம்மன் கோவிலை கடந்து 4 கிலோமீட்டர் தொலை வில் உள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும்.

அங்கு கவுண்டர் திரு. திருமலைசாமி அவர்களின் குமாரனான திரு . O.T. ராமகிருஷ்ணன் எனது பால்ய சிநேகிதன்.

அவன் வீட்டில் உண்ட குரும்பாட்டு நுரையீரல் பிரட்டலே ஆகும் . நுரையீரல் பிரட்டலை சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிடுகையில் நான் சொக்கி போனேன்.

இந்தப் பிரட்டல் க்கு அவர்கள் இரும்பு சட்டியை பயன்படுத்தினார்கள்.

இதை நாம் சுடுசாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் , சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், தோசை மற்றும் பூரி உடன் சாப்பிட சரியான பக்கபக்க உணவாக திகழும்.

தேவையான பொருட்கள்
நுரையீரல் 1 ( பொடியாக நறுக்கியது)
சுத்து கொழுப்பு 250 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் 8 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
கறிவேப்பில்ல கொஞ்சமாக
கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக
பச்சை மிளகாய் 3 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 18
வரமிளகாய் 8
கொத்தமல்லி 1 மேஜைக்கரண்டி
பட்டை 2
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
கசாகசா 1 தேக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 8
சோம்பு 1 தேக்கரண்டி
குருமிளகு 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்

செய்முறை
1. மசாலாவாக அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக சிறிது தண்ணீர் கூட சேர்த்துகோங்க நன்றாக மையமாக நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள நுரையீரலை தண்ணீரில் நன்றாக அலசி கொள்ள வேண்டும்.

3. அதன் பிறகு ஒரு பாத்திரத்துல பாதி தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதில் நுரையீரல் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதில் தண்ணீரில் நுரை நுரையாக வரும்.

4. அதன் பிறகு நன்றாக கை பொறுக்கும் சூடு அளவிற்கு ஆறவைக்க வேண்டும் , அதன் பிறகு கை பொறுக்கும் சூட்டில் நன்றாக பிசிற வேண்டும் அதில் இருந்து வரும் நுரையை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

5. அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் நன்றாக அலசி கழுவி கொள்ள வேண்டும்.

6. இச்சமயத்துல பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவிலான தண்ணீர் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க குக்கரின் மூடியை மூடி மற்றும் விசிலை பொருத்தி குறைந்தபட்சமாக 15 விசில் வரை விட்டுகோங்க.

7. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

8. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்துநன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

9. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

10. அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

11. பிறகு அதில் சுத்து கொழுப்பை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும் சில நிமிடங்கள் அதன் பிறகு வேகவைத்துள்ள நுரையீரலை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

12. அதன் பிறகு ஆட்டிவைத்துள்ள முளகு மசாலாவை கொட்டி அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க, நன்றாக சிறுதீயிலேயே கிளறவும்.

13. முளகு மசாலா நன்றாக பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

14. பின்பு மசாலா சுண்ட ஆரம்பித்த உடன் அதில் சிறிது சிறிதாக மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி பிரட்ட வேண்டும் நன்றாக சுருள வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

Post a Comment