அவியல் tamil samayal

Loading...
Description:

அவியல்தேவையான பொருட்கள்

காரட் 2

உருளைக்கிழங்கு 2

வாழைக்காய் 1/2

பூசணி காய் 1 கீற்று

முருங்கை 1

சௌ சௌ 1

பீன்ஸ் 100 கிராம்

கொத்தவரங்காய் 100 கிராம்

பட்டாணி 1 கப்

தேங்காய் 1/2 மூடி

சீரகம் 2 ஸ்பூன்

புளிக்காத தயிர் 2 கப்

தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப

உப்பு கறிவேப்பிலை தேவைக்கு ஏற்ப

செய்முறை

எல்லா காய்கறிகளையும் நீள வாக்கில் வெட்டி எடுத்து கொள்ளவும் (தேவையான காய்கறிகளுக்கு தோல் நீக்கி விட்டு நறுக்கவும்).பாத்திரத்தில் நீர் ஊற்றி காய்கறிகளுடன் உப்பு போட்டு வேக வைக்கவும்.

துருவிய தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து வைக்கவும்

காய்கறிகள் குழைந்து விடாமல் பார்த்து கொள்ளவும் .

அரைத்த கலவையை வெந்த காய்களுடன் கொட்டி ,அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக கிளறவும்

.
வெந்த காய்கறிகள் நன்கு ஆறிய உடன் .தயிரை கடைந்து அதில் ஊற்றி மெல்ல கிளறவும்

வாணலியில் தேங்காய் எண்ணையை சூடாக்கி ,அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்து ,அவியலில் கொட்டி பரிமாறலாம்

Post a Comment