அவல் சர்க்கரைப் பொங்கல்,pongal 2017

Loading...
Description:

தேவையானப் பொருள்கள்:

அவல் – ஒரு கப்
பச்சைப் பயறு – 1/4 கப்
வெல்லம் – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிது
பால் – 1/2 கப்
ஏலக்காய் – அரை சிட்டிகை
நெய் – 1/4 கப்
முந்திரி – 10
திராட்சை – 10

aval

செய்முறை:

* பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

* அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

* பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

* பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

* சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

* இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

* ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

* ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

* சுவையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Post a Comment