அழகா ஜொலிக்க எலுமிச்சை amazing beauty benefits lemon

Loading...
Description:

02-1364885137-bleach

 

அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதிலும், உடல் பராமரிப்பு மற்றும் அழகுப் பராமரிப்பிலும் சிறந்து விளங்கும் பொருள் என்று சொன்னால், அது எலுமிச்சை தான். எலுமிச்சையில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் கோடை ஆரம்பித்துவிட்டதால், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் சருமம் பொலிவிழந்து காணப்படும். மேலும் பல சரும பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தரக்கூடிய சக்தி எலுமிச்சைக்கு உள்ளது.

ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் நிறைய ஆன்டி-செப்டிக் பொருள் உள்ளதால், அவை சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்துவிடும். குறிப்பாக, கோடைகாலம் என்பதால், வெளியே செல்ல பயமாக இருக்கும். ஆகவே அப்போது அழகைப் பராமரிப்பதற்கு வீட்டில் ஜூஸ் போட வைத்திருக்கும் எலுமிச்சையை வைத்து, அழகை பராமரிக்கலாம்.

சரி, இப்போது எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று ஒருசிலவற்றை கூறியுள்ளோம். அதைப் படித்து, வீட்டிலேயே அழகை பராமரித்து வாருங்கள்.


ப்ளீச்சிங்
எலுமிச்சையில் சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே இவற்றை வைத்து ப்ளீச்சிங் செய்யலாம். அதற்கு எலுமிச்சையை தேனுடன் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும்.


பொடுகை நீக்க
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சையின் சாற்றை ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். பின்னர் எலமிச்சையினால், தலையில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, எண்ணெய் தடவி, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும்.


முழங்கால் மற்றும் முழங்கை கருமை போக்க
பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும்.


சரும அழற்சியை நீக்க
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவற்றை சருமத்தில் அழற்சி உள்ள இடத்தில் பயன்படுத்தினால், அழற்சியானது எளிதில் குணமாகும்.


ஹேர் கண்டிஷனர்
எலுமிச்சையை ஹேர் கண்டிஷனர் என்றும் சொல்லலாம். அதிலும் கூந்தலுக்கு சீகைக்காய் போட்டு குளித்தால், அப்போது தலைக்கு செயற்கை கண்டிஷனர்களைப் பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி அலசி, பின் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசினால், கூந்தல் நன்கு மென்மையாக கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.


கிளின்சிங் நேச்சுரல்
கிளின்சர்களில் எலுமிச்சையும் ஒன்று. அதற்கு எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு சிறிது நேரம் முகத்தில் தேய்த்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.


முகப்பருவை போக்க
முகப்பருவை போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். அதிலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெயையும் வெளியேற்றிவிடும்.


முதுமைத் தோற்றத்தை தடுக்க
எலுமிச்சையின் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களால் உண்டாகும் முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.


நறுமணமுள்ள கூந்தல்
இந்த பழம் புத்துணர்ச்சி தரும் நறுமணத்தைக் கொண்டதால், இதனை சாற்றை வைத்து, கூந்தலை அலசினால், கூந்தலில் இருந்து ஒரு நல்ல நறுமணம் வரும். சொல்லப்போனால், இது ஒரு ஹேர் ஸ்ப்ரே போன்றது.


ஸ்கரப்
எலுமிச்சைக்கு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றும் சக்தி உள்ளது. சொல்லப்போனால், எலுமிச்சை எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது. அதற்கு எலுமிச்சை துண்டுகளை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.


வெள்ளையான நகம்
எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், எலுமிச்சையை கடுகு எண்ணெயில் நனைத்து, நகங்களில் தேய்த்து வந்தால், நல்ல அழகான நகங்களைப் பெறலாம்.

Amazing Beauty Benefits of Lemon

Lemon is one of the most versatile natural ingredients to enhance your beauty. The beauty benefits of lemon are numerous and very potent. One of the main beauty benefits of lemon is that it works as natural bleach. So, lemon lightens skin and hair naturally. It is citrus and thus has many antiseptic properties. That is why the beauty benefits of lemon also includes curing minor infections.

Post a Comment