அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும்

Loading...
Description:

உங்கள் முகம் கருப்பாக, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் மேடு பள்ளங்களுடன் உள்ளதா? இதனைப் போக்க எத்தனையோ க்ரீம்களை முயற்சித்தும் பலனில்லையா? மாதம் ஒருமுறையாவது அழகு நிலையம் சென்று மொய் வைப்பவரா? இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஓர் அற்புத ஃபேஸ் மாஸ்க் உள்ளது. ஒரே மாதத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ அதற்கான ஃபேஸ் பேக்குகள்! அது தான் முட்டை மற்றும் டிஷ்யூ பேப்பர் கொண்டு போடப்படும் ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுவதால்,

முகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முகப் பொலிவு மேம்பட்டு காணப்படும். உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அதை மறைக்க சில டிப்ஸ்… சரி, இப்போது முட்டை டிஷ்யூ ஃபேஸ் மாஸ்க் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதை எப்படி போட வேண்டும் என்பதையும் காண்போம்.

நன்மை #1 இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதால், மூக்கு, தாடை, கன்னம் போன்ற பகுதியில் சொரசொரப்பை ஏற்படுத்தும் கரும்புள்ளிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

நன்மை #2 சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கைப் போட்டால், சருமத் துளைகள் இறுக்கமடைந்து, மேடு பள்ளங்கள் மறைய ஆரம்பிக்கும்.

நன்மை #3 வெளியே அதிகம் சுற்றுவதால், சருமத் துளைகளில் அழுக்குகள் மற்றும் தூசிகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். ஆனால் முட்டை டிஷ்யூ ஃபேஸ் மாஸ்க் போடுவதால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்கி, முகத்தின் பொலிவு மேம்பட்டு இருக்கும்

Post a Comment