ஃபில்டர் காபி

Loading...
Description:

fgghஎன்னென்ன தேவை?

பீபெரி ரக காபிக் கொட்டையும் பிளான்டேஷன் ஏ ரக காபிக் கொட்டையும் சம அளவு எடுத்து வறுத்துப் பொடித்த காபி தூள்,
பால், சர்க்கரை – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

காபி வடிகட்டியில் (ஃபில்டர்) 2 டேபிள்ஸ்பூன் காபி தூள் போட்டு, ஒன்றரை டம்ளர் சூடான தண்ணீர் விடவும். முதல் டிகாக்ஷன் இறங்கியதும்,  இன்னொரு முறை வெந்நீர் விட்டு, இரண்டாவது டிகாக்ஷன் இறக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பாலை அவ்வப்போது காய்ச்சி  காபி தயாரித்தால்தான் சுவை. முதலில் சர்க்கரை, அதன் மேல் டிகாக்ஷன், பிறகு பால் எனக் கலந்து, நுரைக்க ஆற்றிப் பரிமாறவும்.

Post a Comment